விஜய் பற்றி திரிஷா பேச்சு: பரபரப்பு வீடியோ
சென்னை: நடிகர் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. இதுவே விஜய்க்கு கடைசி படம் என் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் முழுநேர அரசியலில் குதித்துள்ளார். இந்நிலையில் துபாயில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அதில், 25 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ள நடிகை திரிஷாவிற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
அப்போது மேடையில் அவர் பணியாற்றிய ஒவ்வொரு நடிகர்களை குறித்து திரிஷா பேசினார். அப்போது திரிஷாவிடம் விஜய்யின் புகைப்படம் காட்டப்பட்டது. பிறகு பேசிய திரிஷா “விஜய்யின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள். அவரது கனவுகள் எதுவாக இருந்தாலும் அனைத்துமே நிறைவேறட்டும். ஏனெனில், அவர் அதற்குத் தகுதியானவர்” என்று கூறியுள்ளார். விஜய் குறித்து திரிஷா பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.