கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
திருப்பத்தூர்: கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களின் மேல் அடுக்கில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலை கொண்டு இருப்பதால், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்தரவள்ளி உத்தரவிட்டுள்ளார்.