தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் 72 பேருக்கு அடையாள அட்டை

*உதவி உபகரணங்கள் வழங்கக்கோரி மனு
Advertisement

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நேற்று நடந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில், 72 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமையன்று, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் உதவி உபகரணங்கள் வழங்கவும், அடையாள அட்டைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. அதில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஆகிேயார் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். இந்த முகாமில், 400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, மருத்துவர்கள் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் 72 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், செயற்கை கால், செயற்கை கை உள்ளிட்ட உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை போன்றவை கோரிக்கைகளுக்காக பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து, தகவல் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட அளவிலான முகாமில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்க, ஊராட்சி அளவில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த முகாம்களிலும் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செய்யாறு ஒன்றியம் கொருக்கை கிராமத்தில் இன்று முகாம் நடக்கிறது. அதேபோல், வரும் 30ம் தேதி தெள்ளார் ஒன்றியம் மேல்பாதி, செப்டம்பர் 3ம் தேதி வெம்பாக்கம் ஒன்றியம் குத்தனூர், 9ம் தேதி வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

Advertisement