தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்று சந்திர கிரகணம்: 85 நிமிடங்கள் நீடிக்கும்; வெறும் கண்களால் பார்க்கலாம்

சென்னை: சந்திரகிரகணம் இன்று துவங்குகிறது, 85 நிமிடங்கள் நீடிக்கும். இதை, பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம். சூரியன், பூமி, சந்திரன் போன்றவை ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் நிகழ்கிறது. அந்த நேரத்தில் பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்தால், அது சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு என அழைக்கப்படுகிறது. நிலவு முழுமையாக பூமியின் நிழல் பகுதியில் மறைவது, முழு சந்திர கிரகணமாகும். இன்று இரவு முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இது நாடு முழுதும் தெரியும். இது குறித்து சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் அதிகாரிகள் கூறியதாவது: இன்று நிகழ உள்ள சந்திர கிரகணம், 85 நிமிடங்கள் நீடிக்கும். இரவு 8.58 மணிக்கு சந்திரன் முதலில் மங்கலான புறநிழல் பகுதிக்குள் நுழையும். இதை கண்களால் பார்ப்பது கடினமாக இருக்கும். பின்னர் 9.57க்கு பகுதி கிரகணமாக துவங்கும்.

Advertisement

அப்போது, சந்திரன் இருண்ட கருநிழல் பகுதிக்குள் நுழையும். அந்த கிரகணத்தை எளிதாக பார்க்க முடியும். இரவு 11.01 முதல் நள்ளிரவு 12.33 மணி வரை, சந்திரன் முழுமையாக மறையும். அதிகாலை 1.26 மணிக்கு, சந்திரன் கருநிழல் பகுதியில் இருந்து முழுமையாக வெளியேறும். அதிகாலை 2.25க்கு புறநிழல் பகுதியை விட்டு வெளியேறும். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். ேமலும் வழக்கமாக கிரகண நேரங்களில் அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்பட்டிருக்கும். இந்த சந்திர கிரகணம் இரவு நேரத்திலேயே நடைபெறுவதாக இருந்தாலும் தமிழகத்தில் உள்ள பல முக்கிய கோள்விகளில் செப்டம்பர் 7ம் தேதி பகல் 1 மணியில் இருந்தே கோவில் நடை சாத்தப்பட்டு விடும். மீண்டும் 8ம் தேதி அதிகாலை கிரகண சாந்தி பூஜை முடிந்த பிறகு, வழக்கமான பூஜைகளுக்கு பிறகு பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில், சந்திர கிரகணத்தை தொலைநோக்கி வழியாக பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.

Advertisement

Related News