கோத்தகிரி விவசாயிகள் மகிழ்ச்சி உயிலட்டி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
கோத்தகிரி : வடகிழக்கு பருவமழையையொட்டி உயிலட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் கூக்கல்தொரை பகுதி கிராம விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தேயிலைக்கு அடுத்தபடியாக முட்டைகோஸ், கேரட், புரூக்கோளி, மலைப்பூண்டு, பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்டவைகள் கோத்தகிரி கூக்கல்தொரை பகுதியில் விளைவிக்கப்படுகிறது.
Advertisement
இதற்கு முக்கிய நீராதாரமாக உயிலட்டி நீர்வீழ்ச்சி உள்ளது. வடகிழக்கு பருவமழையையொட்டி இந்த நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இங்குள்ள 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மகிழ்ச்ச்சியடைந்துள்ளனர்.
Advertisement