சென்னை: 2023-2024ம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம். மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு பதிவு செய்த செல்போனுக்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்படும்.