சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 3 அணிகளுடன் ஆலோசனை: சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
இந்த குழுவினர் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கட்சிப்பணி-மக்கள் பணி-மக்களவைத் தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர். சட்டமன்றத் தேர்தல் 2026க்கு இப்போதிலிருந்தே பணிகளைத் தொடங்கிட வேண்டுமென்றும், இந்த ஆலோசனை கூட்டத்தின் வழியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அரணாக திகழும் திமுகவும் - திமுக அரசும், முன்னெடுத்து வரும் பணிகளைச் சிறுபான்மையின மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். திமுக அரசு அமைந்தது முதல் மீனவர் நலனில் அக்கறையுடன் எடுத்து வரும் நடவடிக்கைகளை பயனாளிகளிடம் கொண்டு சேர்க்க துணை நிற்பது, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து கேட்கப்பட்டது. மீனவர்கள் வாழுகின்ற பகுதிகளில் திமுக பணியை திறம்பட மேற்கொண்டு, திமுக அரசின் திட்டங்களையும் முழு வீச்சில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் குழுவினர் ஆலோசனை வழங்கினர்.