சென்னை பெண் எஸ்ஐ தற்கொலை முயற்சி: திண்டுக்கல் அருகே பரபரப்பு
Advertisement
இந்நிலையில், இவர் குரூப்-1 தேர்வு எழுதுவதற்காக நேற்று முன்தினம் திண்டுக்கல் வந்தார். தேர்வு எழுதி வீட்டிற்கு வந்த சரோஜினி, தேர்வு சரிவர எழுதாததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று சரோஜினி, அவரது தந்தை கோபால் சாப்பிடுவதற்காக வைத்திருந்த ரத்த அழுத்த மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு சரியாக எழுதாததால் பெண் எஸ்ஐ அதிக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement