தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் 3,258 தொழிலாளர்களுக்கு போனஸ், கருணை தொகை: அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியளார்கள் ஒன்றியங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2024-25ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் 8.33 விழுக்காடு மற்றும் 11.67 விழுக்காடு கருணை தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தின் அலுவலகக் கூட்டரங்கில் சி மற்றும் டி தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியளார்கள் ஒன்றியங்களில் பணிபுரியும் 3,258 பணியாளர்களுக்கு 2024-25ம் ஆண்டிற்கான ரூ.4.74 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணை தொகையை வழங்கிடும் வகையில் 18 பணியாளர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜான் லூயிஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.