தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
Advertisement
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மாதம் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமித்த அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரிகளின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு ஊராட்சிகள் 5ம் திருத்தச் சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களில் சேர்க்கை திருத்த சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement