தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஏடிஎம் கொள்ளை வழக்கு 4 பேருக்கு 24 ஆண்டு சிறை தண்டனை: இருவருக்கு 12 வருடம் ஜெயில், திருச்செங்கோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருச்செங்கோடு: கேரளாவில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான 4 பேருக்கு 24 ஆண்டுகளும், இருவருக்கு 12 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து, திருச்செங்கோடு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்ட எஸ்பியாக இருந்த ராஜேஷ்கண்ணனுக்கு கடந்த 27.9.2024 அன்று, கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட காவல் துறையிடம் இருந்து, ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகள், வெள்ளை நிற கிரேட்டா கார் மற்றும் ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியில் வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இதனையடுத்து, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்று பாலம் அருகே, திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் எஸ்ஐக்கள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியை, போலீசார் தடுத்து நிறுத்திய போது, டிரைவர் அதிவேகமாக சங்ககிரி நோக்கி ஓட்டிச்சென்றார்.

போலீசார் விரட்டிச்சென்றனர். ஆனால் லாரி, 2 டூவீலர்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார், சங்ககிரி சன்னியாசிபட்டி அருகே லாரியை தடுத்து நிறுத்தி, டிரைவர் உள்பட 5 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. லாரியில் இருந்த 4 பேரை இன்ஸ்பெக்டரின் வண்டியில் ஏற்றியும், லாரியின் டிரைவர் மற்றும் ஒரு காவலரை கன்டெய்னர் வண்டியிலேயே ஏற்றி, வெப்படை காவல்நிலையம் நோக்கி கொண்டு சென்றபோது, கன்டெய்னருக்குள் சத்தம் கேட்டது.

பின்னால் வந்த இன்ஸ்பெக்டர் தவமணி, தோப்புகாடு பகுதிக்கு அருகில் லாரியை நிறுத்தி, கன்டெய்னரை திறக்கச் செய்து பார்த்தபோது, உள்ளே 2 பேர் இருந்தனர். அதில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் பெரிய பையுடன் கீழே குதித்து தப்பியோடினார். மேலும் டிரைவர், திடீரென இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு தப்பியோடினார். விரட்டி பிடிக்க முயன்றபோது லாரி டிரைவர் இரும்பு கொக்கியால் எஸ்ஐ ரஞ்சித்தை கடுமையாக தாக்கினார்.

அப்போது, இன்ஸ்பெக்டர் தவமணி, தற்காப்புக்காக துப்பாக்கியால் டிரைவரை இரண்டு முறை சுட்டார். மற்றொரு நபர் கற்களை வீசினார். அவரது காலில், இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார். காயமடைந்த அரியானா பல்வால் பகுதியை சேர்ந்த ஜூமாந்தின்(37), அசார் அலி (எ) அசாருதீன் ஆகிய இருவரையும் மீட்டு, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் ஜூமாந்தின் இறந்தார். அசாருதீனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வழக்கில் தொடர்புடைய இர்பான் சக்கூர் (32), சௌக்கீன்(26), முகமது இக்ரம்(42), ஷபீர்கான் (26) மற்றும் முபாரக் (25) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் 27.9.2024 அன்று அதிகாலையில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர்கள் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் அம்பலமானது.

அவர்களிடம் இருந்து ரூ.67 லட்சத்து 82 ஆயிரத்து 700 மற்றும் கன்டெய்னர் லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிரேட்டா கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருச்செங்கோடு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்-2ல் நீதிபதி மாலதி முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அதில் அரியானா மாநிலம் பல்வால் மாவட்டம், சோப்தாகோயின் பகுதியை சேர்ந்த இர்பான் சக்கூருக்கு (32) 12 ஆண்டுகள் சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பிஷ்ரு மேவாட் மாவட்டம் அசார் அலி (எ) அசாருதீனுக்கு(29) 12 ஆண்டுகள் சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், குடாலி கிராமம் ஷபீர்கான்(26), ஹெய்தின் பல்வால் மாவட்டம் மலாயி கிராமம் சௌக்கீன் (26), புலானா தாலுகா முகமது இக்ரம்(42), ஹெய்த்தன் பகுதியை சேர்ந்த முபாரக்(25) ஆகிய 4 பேருக்கு தலா 24 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

* அதிரடியால் அசர வைத்த எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்

திருச்சூரில் இருந்து ஏடிஎம் கொள்ளையர்கள் பாலக்காடு வந்து தமிழ்நாட்டின் கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டம் வழியாக செல்வதற்கு வாய்ப்புள்ளது என்று அப்போதைய நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணனுக்கு சம்பவத்தன்று காலை 8.30 மணிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அவர், திருச்செங்கோடு, பரமத்தி, ராசிபுரம் என்று அனைத்து பகுதிகளிலும் போலீசாரை உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் நாமக்கல் தனிப்படை போலீசாருடன் வெப்படை நோக்கி விரைந்தார். அங்கிருந்து சற்றும் யோசிக்காமல் சேலம் எல்லையான சன்னியாசிப்பட்டிக்கும் வந்து போலீசாரை முடுக்கி விட்டு தானும் அதிரடியாக களம் இறங்கினார்.

அவரது அதிரடி நடவடிக்கையால் 9 மணிக்குள், அதாவது அரை மணி நேரத்தில் கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் வந்த கன்டெய்னர் மடக்கி பிடிக்கப்பட்டது. இதற்காக எஸ்.பி. ராஜேஷ்கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்தது. இதேபோல் சிறப்பாக செயல்பட்ட தமிழக போலீசாரை திருச்சூர் டிஎஸ்பி ஜிஜோ வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

* கடிவாளம் போட்டது தமிழக போலீஸ் தான்

ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று பல்வேறு மாநிலங்களில் அரியானா கும்பல் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த மாநிலங்களில் ஏராளமான வழக்குகளும் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கைது ெசய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட சிலர் நிபந்தனை ஜாமீனிலும் வெளிவந்துள்ளனர். இது போன்ற கொள்ளை வழக்குகள் மீதான விசாரணையும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதும் அந்த மாநிலங்களில் மந்தமாகவே உள்ளது.

அதேநேரத்தில் இந்த கொள்ளை கும்பலை உயிரை பணயம் வைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர் தமிழ்நாடு போலீசார். அதேபோல் வழக்கு விசாரணையில் தீவிரம் காட்டி, கொள்ளையர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவதிலும் பெரும் முனைப்புடன் செயல்பட்டனர். இதன்காரணமாகவே கடந்தாண்டு செப்டம்பர் 27ம் தேதி பிடிபட்ட கொள்ளையர்களுக்கு 2025 அக்டோபர் 14ம் தேதி தண்டனை கிடைத்துள்ளது.

இந்த கொள்ளையர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட பிறகு, ஏடிஎம் கொள்ளையர்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. எங்கும் இதுபோன்ற ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் நடக்கவில்லை. இந்த வகையில் இந்தியாவை உலுக்கிய ஏடிஎம் கொள்ளையர்களுக்கு கடிவாளம் போட்டதில் தமிழக போலீசாருக்கு பெரும் பங்குள்ளது என்கின்றனர் மூத்தஅதிகாரிகள்.

Advertisement