தமிழ்நாடு முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் 14 பேர் மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு
நிதித்துறை இணை செயலாளராக இருந்த கிருஷ்ணன் உன்னி, கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையராகவும், திருவள்ளூர் மாவட்ட திட்ட அதிகாரியாக இருந்த சுகபுத்ரா, நெல்லை மாநகராட்சி ஆணையராகவும், தேர்தல் பிரிவு இணை தேர்தல் அதிகாரியாக இருந்த காந்த், ஓசூர் மாநகராட்சி ஆணையராகவும், பொதுத்துறை துணை செயலாளராக இருந்த அனு, கடலூர் மாநகராட்சி ஆணையராகவும், நாகப்பட்டினம் திட்ட அதிகாரியாக இருந்த ரஞ்சித் சிங், சேலம் மாநகராட்சி ஆணையராகவும், சென்னை அரசு விருந்தினர் இல்ல வரவேற்பு அதிகாரியாக இருந்த கந்தசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையராகவும், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் பொது மேலாளராக இருந்த சதீஷ், ஈரோடு மாவட்ட திட்ட அதிகாரியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
கைத்தறித்துறை ஆணையராக இருந்த விவேகானந்தன், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் லிமிடெட் நிர்வாக இயக்குநராகவும், இந்தத்துறையில் இருந்த ஹனீஸ் சாப்ரா, புதிய திருப்பூர் மேம்பாடு கழக நிர்வாக இயக்குநராவும், பொதுத்துணை கூடுதல் செயலாளராக இருந்த சிவஞானம், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரியாகவும், தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கழகம் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநராக இருந்த அமிர்தஜோதி, கைவினை மேம்பாட்டுக்கழக நிர்வாக இயக்குநராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.