தமிழ்நாட்டை அவமதிக்கும் வகையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கோர வேண்டும்: செல்வப்பெருந்தகை
சென்னை: தமிழ்நாட்டை அவமதிக்கும் வகையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கோர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் "பட்டியலின மக்களின் நிலையை தவறாக சித்தரித்த ஆளுநரின் கருத்துகள் பொறுப்பில்லாத கூற்று. தமிழ்நாட்டை அவமதிக்கும் எந்த சொல்லையும் நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம். ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வார்த்தைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்" என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement