தமிழக மீனவர்கள் 2 பேருக்கு இரண்டு ஆண்டு சிறை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜூன் 30 அன்று விசைப்படகில் சென்ற 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இவர்கள் மீதான வழக்கை விசாரித்த மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 7 மீனவர்களில் 5 பேருக்கு இலங்கை மதிப்பில் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதன் இந்திய மதிப்பு ரூ.7 லட்சத்து 30 ஆயிரம். மற்ற 2 பேரும் இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்டதால் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement