தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆக. 13ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்து, நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement
இதேபோல் கடந்த ஆக. 5ம் தேதி திருப்பாலைக்குடி பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 நாட்டுப்படகு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்களை நீதிபதி, நிபந்தனையின்றி விடுதலை செய்தார். விடுதலையான மீனவர்கள் 11 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Advertisement