தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழக எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் திடீர் மரணம்: கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர்

சென்னை: தமிழக எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் (56) திடீரென்று நேற்று இரவு மரணமடைந்தார்.  தமிழக அரசில் எரிசக்தி செயலாளராக இருந்தவர் பீலா வெங்கடேசன். இவர் உடல்நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நீலாங்கரையில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Advertisement

பீலா வெங்கடேசனின் சொந்த ஊர் கன்னியாகுமரி. 1969ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி பிறந்தார். இவரது தந்தை வெங்கடேசன். முன்னாள் டிஜிபி. சிறைத்துறையில் கடைசியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய், ராணி வெங்கடேசன். இவர், காங்கிரஸ் கட்சியின் சார்பில் சாத்தான்குளம் எம்எல்ஏவாக இருந்தார். பீலா வெங்கடேசனின் கணவர், ராஜேஸ். அவர் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக பணியாற்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.

இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பீலா வெங்கடேசன், எம்பிபிஎஸ் முடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு கணவர் ஐபிஎஸ் ஆக இருந்ததால், இருவருக்கும் இடையே எழுந்த கருத்து மோதலால், ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். இவர், ஒன்றிய அரசில் ஜவுளித்துறையில் பணியாற்றியுள்ளார். பின்னர் தமிழக அரசுப் பணிக்கு திரும்பினார்.

தமிழகத்தில் கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக சிறப்பாக பணியாற்றினார். தற்போது எரிசக்தி துறை செயலாளராக பணியாற்றி வந்தார். ஓய்வு பெறுவதற்கு 4 ஆண்டுகள் உள்ளன. பீலா வெங்கடேசன் மரணமடைந்த தகவல் தெரிந்ததும், பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத் துறைச் செயலாளராகப் பணியாற்றியவர். மேலும் பல பெரும் பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்த அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Related News