தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடியது மாநிலக் கல்விக் கொள்கை :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் 20,021 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அதில், "தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டேன். கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரண்டு கண்கள். ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தை கட்டமைப்பதை அரசு கொள்கையாக வைத்துள்ளது. தமிழகத்தில் 2021 முதல் தற்போது வரை 17.74 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது."இவ்வாறு தெரிவித்தார்.