தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் புதிய 4 மாநகராட்சிகளுடன் இணையும் பகுதிகள் எவை எவை? : அரசிதழில் வெளியீடு

Advertisement

சென்னை: தமிழ்நாட்டில் புதிய மாநகராட்சிகள் தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த புதிய மாநகராட்சியில் சேர்க்கப்படும் ஊராட்சிகள், வட்டங்கள் தொடர்பான அறிவிப்பு அரசிதழில் சேர்க்கப்பட்டு உள்ளது.

அதன் விபரம்:

காரைக்குடி மாநகராட்சி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியுடன், கண்டனுார், கோட்டையூர் பேரூராட்சிகளும், சங்கராபுரம், கோவிலுார், இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூர் ஆகிய கிராம ஊராட்சிகளையும் இணைத்து, மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை மாநகராட்சி:

திருவண்ணாமலை நகராட்சியுடன், வேங்கிக்கால், சின்னகாங்கேயனுார், கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, ஏந்தல், தென்மாத்துார், கீழ்கச்சராப்பட்டு, மேலதிக்கான், சாவல்பூண்டி, நல்லவன்பாளையம், கனந்தம்பூண்டி, ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், அடி அண்ணாமலை, தேவனந்தல், ஆடையூர், துர்க்கை நம்மியந்தல், மலப்பாம்பாடி ஆகிய ஊராட்சிகளும், அடி அண்ணாமலை பாதுகாக்கப்பட்ட காடுகள் பகுதிகளையும் இணைத்து, மாநகராட்சி ஏற்படுத்தப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாநகராட்சி:

புதுக்கோட்டை நகராட்சியுடன், திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, தேக்காட்டூர், 9ஏ நத்தம்பண்ணை, 9பி நத்தம்பண்ணை, வெள்ளனுார், திருவேங்கைவாசல், வாகவாசல், முள்ளூர் கிராம ஊராட்சிகள், கஸ்பா காடுகள் மேற்கு பகுதி ஆகியவற்றை இணைத்து, புதுக்கோட்டை மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

நாமக்கல் மாநகராட்சி:

நாமக்கல் நகராட்சியுடன், வகுரம்பட்டி, வள்ளிப்புரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து, நாமக்கல் மாநகராட்சி அமைக்கப்படும்.

இவ்விபரம், தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement