தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை
06:45 AM Jun 16, 2024 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குமரியில் 2.1 மீ, ராமநாதபுரம் 2.3 மீ, தூத்துக்குடி, நெல்லையில் 2.2 மீ உயரம் வரை அலைகள் எழும்ப வாய்ப்பு எனவும் இன்று இரவு 11 மணி வரை கடல் அலை சீற்றம் இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.