தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 13ம் தேதி அமைச்சரவை கூட்டம்
Advertisement
இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் 13ம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க வரும் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படவுள்ளது. மேலும், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் பணிகளை வேகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement