தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்
பணி: உதவி பேராசிரியர்.
மொத்த காலியிடங்கள்: 34.
சம்பளம்: ரூ.57,700. வயது: 40க்குள்.
காலியிடங்கள் விவரம்:
1. Veterinary Pharmacology and Toxicology- 1 இடம்- தேனி.
2. Veterinary Public Health and Epidemiology-1 இடம்- தேனி
3. Veterinary parasitology - 2 இடங்கள் (தேனி-1, சேலம்-1)
4. Livestock Products Technology- 4 இடங்கள் (சேலம்-1, தேனி-2, உடுமலைபேட்டை-1)
5. Veterinary and Animal Husbandry Extension Education- 2 இடங்கள் (சேலம்-1, தேனி-1)
6. Veterinary Surgery and Radioilogy-9 இடங்கள் (சேலம்-3, தேனி-3, உடுமலைபேட்டை-3)
7. Veterinary Medicine-8 இடங்கள் (சேலம்-2, தேனி-3, உடுமலை பேட்டை-3)
தகுதி: குறைந்தது 60% மதிப்பெண்களுடன் பி.வி.எஸ்சி/ஏ.ஹெச் மற்றும் பி.விஎஸ்சி படிப்பை முடித்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடப்பிரிவுகள் ஏதேனும் ஒன்றில் 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்று ஏஎஸ்ஆர்பி நெட்/ யுஜிசி-சிஎஸ்ஐஆர் நெட் ஆகிய ஏதாவதொரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் பணி அனுபவம், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான அசல் சான்றுகளுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வீரபாண்டி, தேனி- 625 534.
தேதி: 29.07.2025, காலை 9 மணி.