தமிழக பா.ஜ. தேர்தல் பிரசாரம் மதுரையில் அக்.12ல் துவக்கம்
சென்னை: பாஜ தேர்தல் பரப்புரை வருகிற அக்டோபர் 12ம் தேதி மதுரையில் இருந்து தொடங்குகிறது. இதில், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று மாநில பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் நேற்று சென்னைக்கு திரும்பி வந்தார்.
அப்போது, அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: டெல்லியில் எங்கள் கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினேன். அவர் வருகிற அக்டோபர் 6ம் தேதி சென்னை வருகிறார். சென்னையில் ஏ.சி.சண்முகத்தின் எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். அதன்பின்பு ஜே.பி.நட்டா புதுச்சேரி செல்கிறார்.
டிடிவி.தினகரனை அண்ணாமலை சந்தித்து பேசியது, நண்பர் என்ற முறையில், தனிப்பட்ட நட்பாக சந்தித்து பேசியதாக அண்ணாமலையே கூறிவிட்டார். பாஜவின் தேர்தல் பிரசார பரப்புரையை வருகிற அக்டோபர் 12ம் தேதி மதுரையிலிருந்து தொடங்குகிறோம். பாஜ சார்பில் நடத்தப்படும் தேர்தல் பரப்புரையில், எங்கள் கூட்டணியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள்.