தமிழ்நாடு முதன்மை தலைமை கணக்காயராக பிரெட்ரிக் பொறுப்பேற்பு
சென்னை: தமிழ்நாடு முதன்மை தலைமை கணக்காயராக (தணிக்கை -1), பிரட்ரிக் சியம்லியே நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பிரட்ரிக், இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறை பணியில் 1999ம் ஆண்டு செப்டம்பரில் இணைந்தார். இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகத்தின் கீழ் கடந்த 26 ஆண்டுகளாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். தமிழ்நாடு முதன்மை தலைமை கணக்காயராகப் நியமிக்கப்படுவதற்கு முன்பு, இதே பதவியில் நாகாலாந்தில் இவர் பொறுப்பு வகித்தார். இந்த தகவலை தமிழ்நாடு முதன்மை தலைமை கணக்காயர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement