தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்
பிற மாவட்டங்களில் சராசரியாக 90 டிகிரி வெயில் நிலவியது. இதுதவிர நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது, ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படும் வாய்ப்புண்டு. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக 12ம் தேதி முதல் 17ம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழைபெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.