தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை பிக்டெக் நிறுவனம் உருவாக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை பிக்டெக் நிறுவனம் உருவாக்க வேண்டும். உலக அளவில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் உற்பத்தியில் முக்கிய மையமாக தமிழ்நாடு இருக்க உற்பத்தி திட்டத்தை உருவாக்கியுள்ளோம். தமிழ்நாடு அரசின் வேகம், வெளிப்படைத்தன்மையால் நம்பகத்தன்மை ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் துறையில் கடந்த 4 ஆண்டுகளில் 9 மடங்கு வளர்ச்சி,"இவ்வாறு பேசினார்.
Advertisement
Advertisement