பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
பெண் கல்வியில் சிறந்து விளங்குவதிலும், தொழிலாளர் பங்கேற்பில் நாட்டுக்கே முன்னணியாக உள்ள மாநிலம் தமிழ்நாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவு செய்துள்ளார். ஆங்கில நாளிதழில் வெளியான அமைச்சர் கீதா ஜீவன் கட்டுரையை மேற்கொள்காட்டி முதல்வர் பெருமிதம். நாட்டிலேயே அதிக அளவு பெண்கள் பணிபுரியும் மாநிலமாக உள்ளது தமிழ்நாடு. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த நிலையில் முதல்வர் பதிவு செய்துள்ளார்.