வரிகள் மூலம் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு கொடுத்தது ரூ.8.04 லட்சம் கோடி ஒன்றிய அரசு திருப்பி தந்தது ரூ.1.58 லட்சம் கோடி: புள்ளி விவரத்தில் அதிர்ச்சித் தகவல்
இதன்படி மேற்கண்ட 2018-19 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் மொத்தம் ரூ.4,03,982.61 கோடி கிடைத்துள்ளது. இதுதவிர, தனிநபர், நிறுவனங்கள் மூலமான நேரடி வரி வசூலாக தமிழ்நாட்டில் இருந்து ரூ.4,00,672 கோடி என ெமாத்தம் ஒன்றிய ்அரசுக்கு ரூ.8.04 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இதில், ஒன்றிய அரசு இதே காலக்கட்டத்தில் ரூ.1,58,145.62 கோடியை தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது என புள்ளி விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், மேற்கண்ட காலக்கட்டத்தில் பாஜ ஆளும் மாநிலங்களுக்கு அதிக வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, உத்தர பிரதேச மாநிலத்துக்கு மொத்த வரிப்பகிர்வாக ரூ.1,69,745.3 கோடியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. ஆனால், இந்த மாநிலம் மூலம் ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் ரூ.3,48,159.87 கோடி கோடி மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், மேற்கண்ட 5 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் இருந்து நேரடி வரி வசூல் ரூ.37,983.05 கோடி மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.