கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம் : தமிழ்நாடு அரசு
சென்னை : கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. ஒன்றிய அரசால் மாநிலத்துக்கு தர வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதால் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர்களை RTE ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்ய 10 நாள் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் 25%ஐ தாண்டினால் சிறப்பு முன்னுரிமை பிரிவுகளுக்கு பின், குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அக்.15க்குள் தகுதியுடைய மாணவர்களின் விவரங்களை EMIS PORTAL இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement