தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
சென்னை: வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் சென்னைக்கு 520 கி.மீ தென் கிழக்கிலும், காக்கிநாடாவுக்கு 570 கி.மீ. தெற்கு தென்கிழக்கிலும், விசாகப்பட்டினத்துக்கு 600 கி.மீ. தொலைவிலும் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது.
கடந்த 6 மணி நேரமாக 15.கி.மீ வேகத்தில் நகர்ந்த மோன்தா புயல், தற்போது 18 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், தற்போது வடமேற்கு திசையில் ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகர்கிறது. இந்த புயல் காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே மோன்தா புயல் நாளை கரையை கடக்கிறது.
தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.