தமிழ்நாடு சுகாதார துறையில் 2147 நர்ஸ்கள்
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆக்சிலரி நர்ஸ் மிட்வொய்ப்/வில்லேஜ் ஹெல்த் நர்ஸ் பணிகளுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
வயது: 01.07.2023 தேதியின்படி பொதுப்பிரிவினர்கள் 42 வயதிற்குள்ளும், பொதுப்பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 52 வயதிற்குள்ளும், ஆதரவற்ற விதவைகள் 59 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினரைத் தவிர இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு கிடையாது. முதன்முறையாக விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு கிடையாது.
சம்பளம்: ரூ.19,900-71,900.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆக்சிலரி நர்ஸ் மிட்வொய்பரி பயிற்சி அல்லது மல்டிபர்போஸ் ஹெல்த் வொர்க்கர் பயிற்சி பெற்று தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். படிப்பை
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
10ம் வகுப்பு, பிளஸ் 2, நர்சிங் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்்கள், நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத்தேர்வின் போது சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். எனவே அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600/-. எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.12.2025.