தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 23 செ.மீ. மழை பதிவு
நெல்லை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 23 செ.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு 21 செ.மீ., காக்காச்சி 19 செ.மீ., மாஞ்சோலை 18 செ.மீ., ஆய்க்குடியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்காசி 13, காயல்பட்டினம், செங்கோட்டையில் தலா 10 செ.மீ., சாத்தான்குளத்தில் 9 செ.மீ. மழை பதிவானது. திருச்செந்தூர், தரங்கம்பாடியில் தலா 8 செ.மீ., அம்பாசமுத்திரம், பாமநாசம், பாளையங்கோட்டை, சேரன்மாதேவியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement