தமிழக சுகாதாரத் துறையில் 1429 சுகாதார ஆய்வாளர்கள்
பணி: சுகாதார ஆய்வாளர்- கிரேடு-2 (ஹெல்த் இன்ஸ்பெக்டர்).
மொத்த இடங்கள்: 1429 ( பொது-426, பிற்பட்டோர்-364, முஸ்லிம்-48, மிகவும் பிற்பட்டோர்-275, எஸ்சி- 250, அருந்ததியர்-42, எஸ்டி-24).
வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 லிருந்து 32க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர்கள் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினரைத் தவிர இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. முதன்முறையாக விண்ணப்பிக்கும் பொது பிரிவினருக்கும் உச்சவயது வரம்பு கிடையாது.
சம்பளம்: ரூ.19,500- 71,900.
தகுதி: அறிவியல் அல்லது கணித பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் மல்டி பர்போஸ் ஹெல்த் வொர்க்கர்/சேனிட்டரி இன்ஸ்பெக்டர்/ஹெல்த் இன்ஸ்பெக்டர் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் குறைந்தது 2 வருட படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பாக இருக்க வேண்டும். 10ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ அருந்ததியினருக்கு ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, தமிழ் மொழித் திறனறியும் தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.11.2025.