தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவு: இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தருமபுரியில் அதிகபட்சமாக 81.48% வாக்குகள் பதிவாகியுள்ளன.தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தருமபுரியில் அதிகபட்சமாக 81.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. கள்ளக்குறிச்சியில் 79.25% வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சென்னையில் 53.91 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Advertisement

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 19) அமைதியாக நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது.

தமிழ்நாடு முழுவதும் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வெளியான அறிவிப்பில் 60 சதவீதம் வாக்குகள் பதிவானதாகச் சொல்லப்பட்டது. இரண்டு அறிவிப்புக்கும் பெரிய வித்தியாசம் இருப்பது சர்ச்சையானது.

இந்நிலையில், தற்போது இந்திய தேர்தல் ஆணையம் இறுதியான வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 மக்களவைத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் 72.47 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை வாக்குப்பதிவு 3.01 சதவீதம் குறைந்துள்ளது.

திருவள்ளூர் - 68.31, வட சென்னை - 60.13 , தென் சென்னை - 54.27 , மத்திய சென்னை - 53.91, ஸ்ரீபெரும்புதூர் - 60.21, காஞ்சிபுரம் - 71.55 , அரக்கோணம் - 74.08 , வேலூர் - 73.42, கிருஷ்ணகிரி - 71.31 , தருமபுரி - 81.48 (அதிகபட்ச வாக்குப்பதிவு), திருவண்ணாமலை - 73.88 , ஆரணி - 75.65 , விழுப்புரம்- 76.47 , கள்ளக்குறிச்சி - 79.25 , சேலம்- 78.13 , நாமக்கல் - 78.16 , ஈரோடு - 70.54 , திருப்பூர் - 70.58 , நீலகிரி - 70.93 , கோவை - 64.81 , பொள்ளாச்சி -70.70 , திண்டுக்கல் - 70.99 , கரூர்- 78.61 , திருச்சி -67.45 , பெரம்பலூர் - 77.37 , கடலூர் - 72.28 , சிதம்பரம் - 75.32 , மயிலாடுதுறை - 70.06 , நாகப்பட்டினம் - 71.55 , தஞ்சாவூர்- 69.18 , சிவகங்கை - 63.94 , மதுரை - 61.92 , தேனி - 69.87 , விருதுநகர் -70.17 , ராமநாதபுரம் -68.18 , தூத்துக்குடி - 59.96 , தென்காசி - 67.55 , திருநெல்வேலி - 64.10 , கன்னியாகுமரி - 65.46 % வாக்குகள் பதிவாகியுள்ளது.

Advertisement

Related News