எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதல்வர் மு.க ஸ்டாலின்
Advertisement
உலகளவில் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன விரிவாக்கம் மூலம் 400க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எலக்ட்ரானிக்ஸ் துறையில் அளப்பரிய பங்களிப்பால் டெல்டா நிறுவனம் உலகளவில் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று கூறியுள்ளார்.
Advertisement