தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல்
சென்னை: தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேசன் (55) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கரின் சமூக வலைதள பதிவில்:
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர். பீலா வெங்கடேசன் IAS அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றது.
கொரோனா பேரிடர் காலத்தில் நான் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளராக இருந்து திறம்பட பணியாற்றி, தனது அர்ப்பணிப்பு மிகுந்த செயல்பாடுகளினால் அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.