விடை பெற்றார் சங்கர் ஜிவால் தமிழ்நாட்டின் டிஜிபியாக(பொ) வெங்கட்ராமன் பதவியேற்பு
சென்னை: தமிழகத்தின் புதிய டிஜிபியாக (பொறுப்பு) வெங்கட்ராமன் இன்று மதியம் பதவியேற்றார். அவரிடம் அனைத்து பொறுப்புகளையும் ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஒப்படைத்தார்.
தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய டிஜிபியாக (பொறுப்பு) வெங்கட்ராமன் இன்று மதியம் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் அனைத்து பொறுப்புகளையும் புதிய டிஜிபி வெங்கட்ராமனிடம் சங்கர் ஜிவால் ஒப்படைத்தார். இந்நிகழ்சியின் போது உயர் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் உடன் இருந்தனர். ஓய்வுபெற்ற சங்கர் ஜிவால் இந்திய காவல் பணியில் 35 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றினார். இவருக்கு காவல்துறை சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை பிரிவு உபசார விழா கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து முறையாக ஓய்வு பெறும் நாளான இன்று, தனது பணியில் இருந்து சங்கர் ஜிவால் ஓய்வு பெறுகிறார். இவரது சிறப்பான பணியால், ஓய்வு பெற்ற இவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தீயணைப்பு ஆணையம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஜிபி வெங்கட்ராமன், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். மேலும் தமிழ்நாடு காவல்துறை (தலைமையிடம்) டிஜிபி யாக பணியாற்றிய வினித் தேவ் வான்கடே , தமிழ்நாடு காவலர் குடியிருப்பு மேலாண இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.