தமிழ்நாடு காவல்துறையில் 3665 கான்ஸ்டபிள்கள்
i) காவல்துறை- இரண்டாம் நிலை காவலர்- ஆண்கள், பெண்கள் உள்பட 2833 பேர்.
ii) சிறை மற்றும் சீர்திருத்தத்துறை- இரண்டாம் நிலை சிறைக் காவலர்: மொத்த இடங்கள்: 180. ஆண்கள்-142, பெண்கள்-38.
iii) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை: ஆண்கள்- 631 இடங்கள்.
தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி பொதுப் பிரிவினர் 18 லிருந்து 26 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்பட்டோர்/முஸ்லிம்/மிகவும் பிற்பட்டோருக்கு 2 வருடங்களும், எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மூன்றாம் பாலினத்தவர்கள் 31 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகள் 37 வயது வரையிலும், முன்னாள் ராணுவத்தினர் 47 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ.18,200- ரூ.67,100.
உடற்தகுதி: குறைந்தபட்சம் ஆண்கள் 170 செ.மீ., உயரமும், பெண்கள் 159 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும். (எஸ்சி/எஸ்டி- ஆண்கள் 167 செ.மீ., பெண்கள்- 157 செ.மீ). மார்பளவு (ஆண்கள் மட்டும்) சாதாரண நிலையில் 81 செ.மீ., அகலம், விரிவடைந்த நிலையில் 86 செ.மீ., அகலம் இருக்க வேண்டும்.
உடற்திறன் தகுதி: ஆண்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். பெண்கள் 400 மீட்டர் தூரத்தை 2½ நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். மேலும் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு 2 பிரிவுகளை கொண்டது. பிரிவு-1ல் தமிழ்மொழி தகுதித் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். பிரிவு-2ல் பொது அறிவு கேள்விகளுடன் 70 மதிப்பெண்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தமிழ் மொழி தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 32 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே முதன்மை தேர்வு விடைத்தாள் திருத்தப்படும்.
உடற்தகுதி தேர்வில் விண்ணப்பதாரர்கள் உயரம், மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) ஆகியவை பரிசோதிக்கப்படும். உடற்தகுதி தேர்வில் விண்ணப்பதாரர் ஓடுதல், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இறுதியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
கட்டணம்: ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.09.2025.