தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க கொள்கைப் படையாய் திரண்ட மக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவு
சென்னை: தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க-கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்துள்ளன.
இந்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தீர்மான ஏற்புக் கூட்டங்கள் திமுக சார்பில் கடந்த 20, 21ம் தேதி என 2 நாட்கள் நடந்தன. இதில் திமுக முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஒவ்வொரு கூட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றனர். இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த இரு நாட்களில், மாநிலம் முழுவதும் 72 திமுக மாவட்டங்களிலும், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க-கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.