தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்எல்ஏ.க்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வருகை : சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ரகுபதி கிண்டல்!!

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்எல்ஏ.க்கள் இன்று (புதன்கிழமை) கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வந்தனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று கூடிய நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 12 நிமிடங்களிலேயே கூட்டம் முடிந்தது. இன்று 2வது நாள் கூட்டம் கூடியதும் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்த கூட்டத் தொடரில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2 சட்டத் திருத்த முன் வடிவுகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

Advertisement

இதனையொட்டி சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏ.க்கள் கைகளில் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வந்தனர்.எடப்பாடி பழனிசாமியுடன் அதிருப்தியில் உள்ள செங்கோட்டையனும் கூட கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வந்திருந்தார். இந்த நிலையில், அதிமுக எம் எல் ஏ.க்கள் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்துவந்திருந்ததை சுட்டிக்காட்டி பேசிய சபாநாயகர் அப்பாவு, “உறுப்பினர்கள் அனைவருக்கும் ரத்த அழுத்தம் வந்துவிட்டதா?” என்று கிண்டல் தொனியில் பேசினார். அதன் நீட்சியாக அமைச்சர் ரகுபதி, “அது பற்றி நான் விளக்கம் சொல்கிறேன். சிறைவாசிகளுக்கு எல்லாம் ஓர் அடையாளம் தருவார்கள் அல்லவா?. அதுபோல் அதிமுக உறுப்பினர்கள் ஓர் அடையாளத்தோடு வந்துள்ளனர். மற்றபடி, நான் அவர்களை தவறாகச் சொல்லவில்லை.” என்றார்.

Advertisement