கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேட்டி
சென்னை: கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என சென்னை வந்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாப்பில் தற்போது மதிய உணவுத் திட்டம் உள்ளது. காலை உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கான முயற்சியில் உள்ளோம். காலை உணவு திட்டத்தின் விரிவாக்க விழாவுக்கு முதல்வர் என்னை அழைத்ததை பெருமையாக கருதுகிறேன். பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் விழாக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரை அழைப்போம் எனவும் கூறினார்.
Advertisement
Advertisement