தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டிலும் வாக்குத் திருட்டை நடத்த பாஜக சதி: அடுத்த 8 மாதங்களுக்கு விழிப்புடன் இருக்க பா.சிதம்பரம் அறிவுறுத்தல்

நெல்லை: பாஜகவின் சூழ்ச்சியால் பீகார், கர்நாடகாவை போன்று தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான பா சிதம்பரம் எச்சரித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாக்கு திருட்டை தடுப்போம் ஜனநாயகத்தை காப்போம் என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான பா.சிதம்பரம் கடந்த தேர்தல்களில் பல இடங்களில் தோல்வியை தழுவியதற்கு வாக்கு திருட்டே காரணம் என்று கூறினார்.

Advertisement

பீகார், கர்நாடகாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் வாக்கு திருட்டு நடைபெற்றதற்கான ஆதாரங்களை ராகுல் வெளியிட உள்ளதாக கூறிய அவர் அந்த நிலை தமிழ்நாட்டிலும் நடைபெற கூடும் என்று எச்சரித்தார்.

அதற்கான சதி வேலையை பாஜக செய்து வருவதாகவும் பா.சிதம்பரம் குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் அடுத்த 8 மாத காலத்திற்கு இந்தியா கூட்டணி கட்சியினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பா.சிதம்பரம் கேட்டு கொண்டார். தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் அடுத்தகட்டமாக வாக்கு திருட்டுக்கு எதிராக 5 கோடி கையெழுத்து பெரும் இயக்கத்தை காங்கிரஸ் நடத்தி இருப்பதாக கூறினார். ஜனநாயகத்தை காப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது என்றும் அவர் பாராட்டினார். அடுத்து நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாடு வர உள்ளதாக மாநாட்டில் பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். இந்த மாநாட்டில் பாஜக முறைகேடுகளுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Related News