தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 போலீசாருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவித்தது ஒன்றிய அரசு..!!
டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 போலீசாருக்கு ஒன்றிய அரசு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவித்தது. சுதந்திர தினத்தை ஒட்டி குடியரசுத் தலைவர் பதக்கங்களை 24 போலீசாரும் பெற உள்ளனர். ஏ.டி.ஜி.பி. பால நாகதேவி, ஐ.ஜி.க்கள் கார்த்திகேயன், லட்சுமி சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் பெறுகின்றனர். பணியில் சிறப்பான சேவைக்காக எஸ்.பி.க்கள் ஜெயலட்சுமி, விமலா, காவல் துணை ஆணையர் சக்திவேலுக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது.