பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கலவரங்களைத் தூண்டி தமிழ்நாட்டின் அமைதியை குலைக்க முயல்கின்றன: டி.ஆர்.பி.ராஜா
சென்னை: பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கலவரங்களைத் தூண்டி தமிழ்நாட்டின் அமைதியை குலைக்க முயல்கின்றன என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
அமைதியை குலைக்க முயலும் பாஜக - டி.ஆர்.பி.ராஜா
தமிழ்நாட்டில் முதலீடுகள், வேலைவாய்ப்பு கொண்டு வர திமுக அரசு கடுமையாக உழைத்து வருகிறது. பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கலவரங்களைத் தூண்டி தமிழ்நாட்டின் அமைதியை குலைக்க முயல்கின்றன. டிசம்பர் .7ம் தேதி மதுரையில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தயாராகி வருகிறோம்.
மதுரைக்கு சர்வதேச அடையாளத்தை ஏற்படுத்த முயற்சி
மதுரைக்கு புதிய சர்வதேச அடையாளத்தை உருவாக்க திராவிட மாடல் அரசு பணியாற்றி வருகிறது. ஐடி, உற்பத்தி, உலகத் தரம் வாய்ந்த வேலைகளை உருவாக்கும் நகரமாக மதுரையை மாற்ற உழைக்கிறோம். அரசு முயற்சிகளுக்கு ஆதரவளிக்காமல் பாஜக கூட்டணி சர்வதேச அரங்கில் மதுரையின் தரத்தை தாழ்த்த முயல்கின்றன.
இளைஞர்களை மதமோதலுக்குள் தள்ள முயலும் பாஜக
உயர்தர வேலைகளுக்கு இளைஞர்களை தயார் செய்யும் நிலையில், பாஜக அவர்களை மதமோதலுக்குள் தள்ள முயல்கிறது. திருப்பரங்குன்றத்தில் தீபத்தை ஏற்றவில்லை என்று அப்பட்டமாக பொய் கூறி வருகிறது பாஜக.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது- அமைச்சர்
நூற்றாண்டு மரபுப்படி இந்த ஆண்டும் திருப்பரங்குன்றத்தில் அதே இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. பொய், வெறுப்பு, பிரிவினை இல்லாமல் பாஜகவுக்கு அரசியலே இல்லை.