தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் மாதம் ரூ.8000 உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!!

சென்னை: தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

முதுமைக்காலத்திலும் வறுமை, தமிழுக்கு தொண்டு செய்பவர்களை சேராவண்ணம் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.7500ரும் மருத்துவப்படி ரூ.500 ம் என மொத்தம் ரூ.8000 வழங்கப்படுகிறது.

வயது முதிர்ந்த தமிழ்ச் சான்றோருக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ் காத்த தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் மனைவி, திருமணமாகாத மகள், விதவை மகளுக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2,500/- மற்றும் மருத்துவப் படி ரூ.500 சேர்த்து ரூ.3,000 வழங்கப்படுகிறது.

2025-2026ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் கூட்டத் தொடரில் 16.04.2025 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் தொண்டாற்றும் அகவை முதிர்ந்த மறுமலர்ச்சிக்கும் தமிழறிஞர்களுக்கு தற்பொழுது, ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்கள் தெரிவு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 150-ஆக உயர்த்தப்படும். இதற்கென தொடர் செலவினமாக ரூபாய் 48 லட்சம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அவ்வாணையின்படி தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதனை http://tamilvalarchithurai.org/agavai என்ற இணையதளம் மூலம் தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். உதவித் தொகை பெற 58 வயது, ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு. தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு), மரபுரிமையர் (கணவன் / மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப்படிவத்தினை மண்டில / மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை/ உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சி துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.tn.gov.in) கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து நிறைவு செய்யப்பட்ட மூல விண்ணப்பத்தை நேரிலும் tamilvalarchithurai.org/agavai/ என்ற வலைதளம் வாயிலாகவும் விண்ணப்பம் செய்வது கட்டாயமாகும். நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்கள் 17.11.2025 ஆம் நாளுக்குள் அந்தந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலங்களுக்கு வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News