தமிழ்நாடு டிஜிபி பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்க கோரி பிரமோத்குமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!
டெல்லி: தமிழ்நாடு டிஜிபி பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்க கோரி பிரமோத்குமார் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். காவாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. தற்போது தமிழ்நாட்டின் டிஜிபியாக இருக்கும் சந்திர சிவான் பதிவி காலம் வருகின்ற 31ம் தேதி முடிவடைய இருப்பதால் புதிய டிஜிபி தேர்வு செய்யப்பட வேண்டும் அத்தகைய தேர்வு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பெயர் பரிசீலனையில் உள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை இயக்குனர் பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்கப்படவில்லை என்றும் வருகின்ற செப்டம்பர் மாதத்துடன் ஓய்வு பெற இருப்பதால் தனது பெயர் பரிசீலனையில் எடுக்கப்படவில்லை இதன் காரணமாக உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி 6 மாதம் பதவிக்காலம் இருந்தால் டிஜிபி போன்ற உயர்பதவிகளில் பரிசீலனை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. பிரமோத்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், மூத்த அதிகாரி என்றும், செப்டம்பர் மாதம் ஓய்வு பெற இருக்கிறேன். எனவே கடந்தமுறை டிஜிபி பதவிக்கு தனது பெயர் பரிந்துரைக்காத பட்சத்தில் மூத்த அதிகாரியாக இருப்பதால் இந்த முறையாவது தனது பெயரை டிஜிபி பதவிக்கு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தலைமை நீதிபதி தரப்பில் செப்டம்பர் மாதம் ஓய்வுபெற இருக்கிறீர்கள் இந்த நிலையில் எவ்வாறு உங்களது பெயரை டிஜிபி பதவிக்கு பரிசீலிக்க உத்தரவிட முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பிரமோத்குமார் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.