தமிழர்களை இழிவுபடுத்துவதே தமிழக பாஜக தலைவர் பதவியில் இருக்க தகுதியா?: நயினாருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி
சென்னை: பொய் பேசி, தமிழ்நாடு, தமிழர்களை இழிவுபடுத்துவதே தமிழக பாஜக தலைவர் பதவியில் இருக்க ஒரே தகுதியா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். ஜெர்மனியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3201 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. knorr bremse சென்னையில்உள்ள நிறுவனம் அதனுடன் ஜெர்மனியில் ஒப்பந்தம் போடப்பட்டதாக நயினார் கூறுகிறார். knorr bremse உடன் ஒப்பந்தமா என கேட்பது தொழில்துறை சார்ந்த நயினாரின் புரிதல் குழந்தைத்தனமானது. knorr bremse நிறுவனம் 120 ஆண்டுகால வரலாறு கொண்ட ஜெர்மானிய நிறுவனம். knorr bremse நிறுவனத்துக்கு தமிழ்நாட்டில் எந்த தொழிற்சாலையும் கிடையாது என டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement