சிறந்த தமிழ் திரைப்படம், திரைக்கதைக்கான தேசிய விருது பார்க்கிங் படத்துக்கு வழங்கப்பட்டது!!
டெல்லி: டெல்லி விஞ்ஞான் பவனில் 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி வருகிறார். சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதுகளை 'பார்க்கிங்' பெற்றது. பார்க்கிங் படத்தின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதை ராம்குமார் பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். 'பார்க்கிங்' படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை எம்எஸ் பாஸ்கர் பெற்றுக்கொண்டார். தமிழ் படத்திற்கான விருதை பெற்றார் ‘பார்க்கிங்' பட தயாரிப்பாளர் கே.எஸ்.சினிஷ் பெற்றுக்கொண்டார். 'வாத்தி' படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜி.வி.பிரகாஷ் குமார் பெற்றார்.
Advertisement
Advertisement