தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்க முயற்சித்த அதிகாரியை கைது செய்தது லஞ்ச ஒழிப்பு துறை..!!
சென்னை: தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்க முயற்சித்த சார் பதிவாளர் ரேவதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர். தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்க முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து,
Advertisement
புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் போது ரேவதி கையும் களவுமாக சிக்கினார். இதனை கண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சார்பதிவாளர் ரேவதியை கையும் களவுமாக பிடித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
Advertisement