தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த சொகுசு கார் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தைலாபுரம் - பனையூர் சண்டை எந்த அளவுல இருக்கு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தைலாபுர தோட்டத்து தந்தையும், பனையூர் மகனும் பிரிந்து ரொம்ப தூரம் போயிட்டாங்களாம். தோட்டத்துக்குள்ளாற எப்பவுமே 30க்கும் மேற்பட்டோர் வேலை செய்வாங்களாம். அவர்கள் அனைவருக்கும் மகன் செட்டில்மெண்ட் செய்து அனுப்பிட்டாராம். அதோடு தந்தைக்கு அரசியல் அறிக்கை எழுதி கொடுப்பவரையும் ஓரம் கொண்டு போயிட்டாராம். இவ்வாறு தந்தையை மகன் தனிமைப்படுத்தி விட்டதாக, மூத்த பாட்டாளிகள் வேதனையோடு சொல்றாங்க.

Advertisement

பனையூருக்கு போகும்போது, வீட்டில் இருந்த விலை உயர்ந்த கார்களை எல்லாத்தையும் கொண்டு போயிட்டாராம் மகன்.  10 ஆண்டுகளை தாண்டிய ஒரு காரில் தான், தந்தை போயிட்டிருந்தாராம். இதனால் உடல்வலி உள்பட பல்வேறு தொந்தரவுகள் தந்தைக்கு ஏற்பட்டதாம். கையில் காசில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், எப்போதோ தந்தைக்கு மகன் ரூ.20 கோடி தருவதாக சொன்னாராம். அந்த பணம் கிடைத்தால் கை தூக்கி விட்டது போலாகும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தாராம் தந்தை.

ஆனால் ,மகன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றலையாம். இந்த நிலையில் தான், திடீரென இரண்டரை கோடி மதிப்பிலான வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று, ேதாட்டத்துக்கு வந்ததாம். இதனை பார்த்த தந்தை தரப்பினர் ரொம்பவும் ஹேப்பியாகிட்டாங்களாம். அந்த சொகுசு வாகனத்தை கொண்டு வந்தது கல்லூரி பேராசிரியர்கள் குரூப்பாம். எப்போதும் தந்தைக்கு பக்கபலமாகவே அந்த குரூப் இருக்குமாம்.

அவர்களும் லோன் போட்டு வாங்கி கொடுத்ததாக பாட்டாளிகள் சொல்றாங்க. பெரியவரிடம் காசு இல்லை என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாதுன்னு ஒரு தரப்பினர் சொல்றாங்க. அதே நேரத்தில், இனிதான் அய்யாவோட ஆட்டம் ஆரம்பமாக போகுதுன்னு தந்தை தரப்பினர் மார் தட்டுறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அப்செட்டில் இருக்கும் இலைக்கட்சி மா.செ., மலராத கட்சிக்கு எலக்சன்ல வேலைய காட்டிடுவாரு போல..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘அப்படித்தான் தெரியுது.. குளுகுளு மாவட்டத்துல இலை கட்சியில் 3 எழுத்து பெயர் கொண்ட மாசெ புலம்பல் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே இருக்குதாம். மாவட்டத்தின் தலைநகர் தொகுதி சீட் எனக்கு தான் என கூறிக்கொண்டு கடந்த எலக்சனில் தீவிரமாக வேலை செஞ்சிட்டு இருந்தாராம். ஆனா கூட்டணியில் இருந்த தமிழ்நாட்டில் மலராத கட்சிக்கு தலைநகர் தொகுதி ஒதுக்கப்பட்டதாம். அதனால வேற வழியில்லாம 3 எழுத்து பெயர் கொண்ட மாசெ, குளுகுளு மாவட்டத்தின் நுழைவு வாயில் தொகுதியில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டதாம்.

ஆனா தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர் இங்கு வந்து போட்டியிடுவதா என கருதிய இலைக்கட்சி தொண்டர்கள் ஓட்டு மாத்தி போட்டு தோற்கடிச்சு சரியான பாடம் புகட்டினார்களாம். இனி தொகுதி மாறி நின்னா இது தான் நிலைமைன்னு உணர்ந்த மாசெ மாவட்ட தலைநகரில் உள்ள தொகுதிதான் நமக்கு பாதுகாப்பா இருக்கும்னு ஒரு வருஷத்திற்கு முன்பாகவே திட்டம் போட்டு தீவிரமா வேலை செய்திட்டு வந்தாராம். இந்த சூழலில் கடந்த முறை போட்டியிட்ட மாவட்ட தலைநகர் தொகுதியை மீண்டும் மலராத கட்சி குறி வைத்து காய்களை நகர்த்திட்டு வருகிறார்களாம்.

இதை தெரிஞ்சதும் இலைக்கட்சி மாசெ அப்செட் ஆகிவிட்டாராம். மறுபடியும் தொகுதி மாறி சீட் வாங்கி தோற்பதற்கு பதிலா பேசாம போட்டியிடாம இருப்பது தான் பெட்டர்ன்னு தன்னோட ஆதரவாளர்கள்கிட்ட புலம்பி தள்ளினாராம். அதே போல தொகுதியை பறிக்கும் மலராத கட்சிக்கு எலக்சனில் சரியான பாடத்தை புகட்டனும்னு தன்னோட ஆதரவாளர்களிடம் சொல்லி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘சுற்றுப்பயண பிரசாரத்தில் இலைத்தலை குண்டைப் போட்டு போய்ட்டாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘தூங்காநகரில் சுற்றுப்பயண பிரசாரத்தின்போது இலைக்கட்சித் தலைமையான சேலத்துக்காரர், வடபுறத் தொகுதியில் கூட்டணிக்கு வாக்களிக்க மறக்காதீர்கள் எனக் கூறி விட்டு சென்று விட்டார். கூட்டணியின் மலராத கட்சிக்காரர்கள் குன்றத்தை கேட்டு, தர மறுத்ததால் ஒன்றுக்கு இரண்டாக தென்புறம், வடபுறம் இரு தொகுதிகளைக் கேட்டு வைத்திருக்கின்றனர்.

இதனால், வடபுறத்தை குறிவைத்திருந்த இலைக்கட்சியின் மருத்துவர், தான் போட்டியிடத் திட்டமிட்டிருந்த தொகுதியை இழந்து விடுவோமோவென ரொம்பவே அப்செட் ஆனார். கட்சித் தலைமை பொதுவெளியிலேயே அறிவித்த பிறகு என்னசெய்வதென தவித்துப்போன மருத்துவர், சாட்சிக்காரன் காலிலேயே விழுந்து விடலாம் கதையாக மலராத கட்சி நிர்வாகிகளிடமே வடக்கை விட்டுத்தந்து கிழக்கிற்குப்போனால் தன் ‘தனி பங்களிப்புகளை’த் தருவதாக தெரிவித்திருக்கிறாராம்.

ஆளும்கட்சி அற்புதமாக கிழக்கை வைத்திருப்பதால், ஜெயித்து வர முடியாது என்ற நிலையில் இலைக்கட்சியும் இந்த தொகுதியை கூட்டணிக்கு கட்டாயம் தள்ளிவிடும் என்ற நிம்மதியில் மருத்துவர், இப்போதே வடபுறத்தில் வாக்கிங், ஜாக்கிங் என வலம் வந்து அதிகாலை முதலே கண்ணில் தெரிபவர்களிடமெல்லாம் வாக்களிக்க மறந்துடாதீ்ங்க என்பதாக களம் கண்டு வருகிறார். ‘கடைசி நேரத்துல கட்சி காலை வாறிடாம இருந்தா, பார்க்கலாம்’ என காண்போரும் மருத்துவருக்கு பதிலளித்து வருகிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா.

Advertisement