உலக யு15 டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்
ஸ்கோப்ஜெ: உலக டேபிள் டென்னிஸ் யூத் ஸ்டார் கன்டென்டர் யு15 மகளிர் இரட்டையர் போட்டி, மாசிடோனியாவின் ஸ்கோப்ஜெ நகரில் நடந்தது. 15 வயதுக்கு உட்பட்ட மகளிர் பங்கேற்கும் இத் தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவுடன் இந்தியா மோதியது.
Advertisement
அபாரமாக ஆடிய இந்திய வீராங்கனைகள் அனன்யா முரளிதரன், திவ்யன்ஷி போவ்மிக், 11-8, 7-11, 11-8, 6-11, 14-12 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர். இந்த டேபிள் டென்னிஸ் போட்டிகளில், இந்தியா ஒட்டு மொத்தத்தில் 6 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement